அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்: கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்: விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்: சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்: அவனுக்கு அரசர் “பெல்தெசாச்சார்” என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்: அவன் விளக்கம் கூறுவான்” என்றாள்.