| 1 | தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு: தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்: தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும் வருவார் போவார் இல்லாதபடிக்கும் பாழாய்ப் போய்விட்டது: சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி அவர்களை வந்தடைகின்றது. | எரே 25:15 எரே 25:22 எரே 47:4 எசே 26:1-28 யோவே 3:4-8 ஆமோ 1:9 ஆமோ 1:10 சகரி 9:2 சகரி 9:4 |
| 2 | கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே, வாய் திறவாதீர்: உங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர். | ஏசா 41:1 ஏசா 47:5 சங் 46:10 ஆபகூ 2:20 |
| 3 | பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்: சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும், நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம். | 1நாளா 13:5 எரே 2:18 |
| 4 | சீதோனே, வெட்கப்படு: “நான் பேறுகால வேதனை அடையவில்லை: பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை: இளைஞரைப் பேணவுமில்லை: கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை” என்று கடல் சொல்கின்றது: கடற்கோட்டை கூறுகின்றது. | எரே 47:3 எரே 47:4 எசே 26:3-6 ஓசி 9:11-14 வெளிப் 18:23 |
| 5 | இச்செய்தி எகிப்தை எட்டும்போது, தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள். | ஏசா 19:16 யாத் 15:14-16 யோசு 2:9-11 |
| 6 | கடற்கரை நாட்டில் வாழ்வோரே, தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள். | ஏசா 23:10 ஏசா 23:12 ஏசா 21:15 |
| 7 | பண்டைக்காலம் முதல் நிலைபெற்று, களிப்புமிகுந்த நகர் இதுதானா? தொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு அடியெடுத்து வைத்த நகரா இது? | ஏசா 22:2 |
| 8 | அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்? | உபா 29:24-28 எரே 50:44 எரே 50:45 வெளிப் 18:8 |
| 9 | செருக்குற்றோர் சீர்குலையவும், நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும் அவமதிப்பு அடையவும் படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார். | ஏசா 10:33 ஏசா 14:24 ஏசா 14:27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 47:6 எரே 47:7 எரே 51:62 அப் 4:28 எபே 1:11 எபே 3:11 |
| 10 | தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து: இனி இங்குத் துறைமுகமே இராது. | ஏசா 23:14 1சாமு 28:20 யோபு 12:21 புலம் 1:6 ஆகா 2:22 ரோம 5:6 |
| 11 | கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்: கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார். | ஏசா 2:19 ஏசா 14:16 ஏசா 14:17 யாத் 15:8-10 சங் 46:6 எசே 26:10 எசே 26:15-19 எசே 27:34 எசே 27:35 எசே 31:16 ஆகா 2:7 |
| 12 | 12”ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே, இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய், எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ: அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்” என்கிறார் அவர். | ஏசா 23:1 ஏசா 23:7 எசே 26:13 எசே 26:14 வெளிப் 18:22 |
| 13 | இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்: இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்: அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது. | ஏசா 13:19 ஆதி 11:28 ஆதி 11:31 யோபு 1:17 ஆபகூ 1:6 அப் 7:4 |
| 14 | தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்: ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன. | ஏசா 23:1 ஏசா 23:6 எசே 27:25-30 வெளிப் 18:11-19 |
| 15 | அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்: | எரே 25:9-11 எரே 25:22-11 எரே 27:3-7 எரே 29:10 எசே 29:11 |
| 16 | 16”மறக்கப்பட்ட விலைமாதே! யாழினைக் கையிலெடுத்து, நகரைச் சுற்றி வலம் வா. உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு: பண் பல பாடு.” | நீதி 7:10-12 எரே 30:14 |
| 17 | எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர்நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள். | எரே 29:10 செப் 2:7 அப் 15:14 |
| 18 | ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை: பதுக்கி வைக்கப்படுவதுமில்லை: அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும். | ஏசா 60:6 ஏசா 60:7 2நாளா 2:7-9 2நாளா 2:11-16 சங் 45:12 சங் 72:10 சகரி 14:20 சகரி 14:21 மாற் 3:8 அப் 21:3-5 |