8
உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன: பேரலைகள் சுவரென நின்றன: கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
9
எதிரி சொன்னான்:துரத்திச் செல்வேன்: முன் சென்று மடக்குவேன்: கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்: என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்: என் வாளை உருவுவேன்: என் கை அவர்களை அழிக்கும்.”
10
நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்: கடல் அவர்களை மூடிக்கொண்டது: ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம்போல் அமிழ்ந்தனர்.