எசேக்கியேல் 31:16 - WCV
கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.