| 1 | தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்: தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். | ரூத் 4:1 நீதி 1:21-23 நீதி 8:4 சகரி 2:6 |
| 2 | உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள். | ஏசா 44:20 எரே 2:13 ஓசி 8:7 ஓசி 12:1 ஆபகூ 2:13 மத் 15:9 லூக் 15:15 லூக் 15:16 ரோம 9:31 ரோம 10:2 ரோம 10:3 பிலிப் 3:4-7 எபிரெ 13:9 |
| 3 | எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். | சங் 78:1 சங் 119:112 நீதி 4:20 |
| 4 | நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். | யோவா 3:16 யோவா 18:37 1தீமோ 6:13 வெளிப் 1:5 வெளிப் 3:14 |
| 5 | இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்: உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். | ஏசா 11:10 ஏசா 11:11 ஏசா 52:15 ஏசா 56:8 ஆதி 49:10 சங் 18:43 ரோம 15:20 எபே 2:11 எபே 3:5 |
| 6 | ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். | ஏசா 45:19 1நாளா 28:9 2நாளா 19:3 யோபு 8:5 சங் 14:2 சங் 27:8 சங் 32:6 சங் 95:7 எரே 29:12-14 ஆமோ 5:6 மத் 5:25 மத் 7:7 மத் 7:8 மத் 25:11 மத் 25:12 லூக் 13:25 யோவா 7:33 யோவா 7:34 யோவா 8:21 யோவா 12:35 யோவா 12:36 2கொரி 6:1 2கொரி 6:2 எபிரெ 2:3 எபிரெ 3:13 |
| 7 | கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். | ஏசா 1:16-18 2நாளா 7:14 நீதி 28:13 எரே 3:3 எரே 8:4-6 எசே 3:18 எசே 3:19 எசே 18:21-23 எசே 18:27-32 எசே 33:11 எசே 33:14-16 ஓசி 14:1 ஓசி 14:2 யோனா 3:10 மத் 9:13 லூக் 15:10 லூக் 15:24 அப் 3:19 அப் 26:20 1கொரி 6:9-11 யாக் 4:8-10 |
| 8 | என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். | 2சாமு 7:19 சங் 25:10 சங் 40:5 சங் 92:5 நீதி 21:8 நீதி 25:3 எரே 3:1 எசே 18:29 தானி 4:37 ஓசி 14:9 |
| 9 | மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. | சங் 36:5 சங் 77:19 சங் 89:2 சங் 103:11 மத் 11:25 ரோம 11:31-36 |
| 10 | மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. | ஏசா 5:6 ஏசா 30:23 ஏசா 61:11 உபா 32:2 1சாமு 23:4 சங் 65:9-13 சங் 72:6 சங் 72:7 எசே 34:26 ஓசி 10:12 வெளிப் 11:6 |
| 11 | அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. | ஏசா 54:9 உபா 32:2 மத் 24:35 லூக் 8:11-16 யோவா 6:63 ரோம 10:17 1கொரி 1:18 1கொரி 3:6-9 1தெச 2:13 எபிரெ 6:7 யாக் 1:18 1பேது 1:23 |
| 12 | மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்: அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்: மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்: காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும். | ஏசா 35:10 ஏசா 48:20 ஏசா 49:9 ஏசா 49:10 ஏசா 51:11 ஏசா 65:13 ஏசா 65:14 சங் 105:43 எரே 30:19 எரே 31:12-14 எரே 33:6 எரே 33:11 சகரி 2:7-10 ரோம 5:1 ரோம 5:11 ரோம 15:13 கலா 5:22 கொலோ 1:11 |
| 13 | முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்: காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்: இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்: அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும். | ஏசா 11:6-9 ஏசா 41:19 ஏசா 60:13 ஏசா 60:21 ஏசா 61:3 மீகா 7:4 ரோம 6:19 1கொரி 6:9-11 2கொரி 5:17 |