எரேமியா 8:4-6 - WCV
4
நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா?
5
ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்?
6
நான் செவிசாய்த்தேன்: உற்றுக்கேட்டேன். அவர்கள் சரியானதைச் சொல்லவில்லை. “நான் என்ன செய்துவிட்டேன்?” என்று கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைபோல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள்.