சகரியா 2:7-10 - WCV
7
பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.
8
என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்.”
9
“'இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்: தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்: அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.
10
மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி: இதோ நான் வருகிறேன்: வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார் ஆண்டவர்.