| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். | ஏசா 1:16-19 ஏசா 26:7 ஏசா 26:8 ஏசா 55:7 சங் 24:4-6 சங் 50:23 எரே 7:3-11 மல்கி 4:4 மத் 3:2 யோவா 7:17 |
| 2 | இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்: ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். | சங் 1:1-3 சங் 15:1-5 சங் 106:3 சங் 112:1 சங் 119:1-5 சங் 128:1 லூக் 11:28 லூக் 12:43 யோவா 13:17 வெளிப் 22:14 |
| 3 | ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர், “தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி” என்று சொல்லாதிருக்கட்டும்: அவ்வாறே அண்ணகனும், “நான் வெறும் பட்டமரம்” என்று கூறாதிருக்கட்டும். | எண் 18:4 எண் 18:7 உபா 23:1-3 சகரி 8:20-23 மத் 8:10 மத் 8:11 அப் 8:27 அப் 10:1 அப் 10:2 அப் 10:34 அப் 13:47 அப் 13:48 அப் 17:4 அப் 18:7 ரோம 2:10 ரோம 2:11 ரோம 15:9-12 ரோம 15:16-12 எபே 2:12 எபே 2:22 1பேது 1:1 |
| 4 | ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு, | யோசு 24:15 சங் 119:111 லூக் 10:42 |
| 5 | என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்: புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்: ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன். | மத் 16:18 எபே 2:22 1தீமோ 3:15 எபிரெ 3:6 |
| 6 | ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: | ஏசா 56:3 ஏசா 44:5 எரே 50:5 அப் 2:41 அப் 11:23 2கொரி 8:5 1தெச 1:9 1தெச 1:10 |
| 7 | அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய “இறைமன்றாட்டின் வீடு” என அழைக்கப்படும். | ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 66:19 ஏசா 66:20 சங் 2:6 மீகா 4:1 மீகா 4:2 சகரி 8:3 மல்கி 1:11 யோவா 12:20-26 எபே 2:11-13 எபிரெ 12:22 1பேது 1:1 1பேது 1:2 |
| 8 | சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களை ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன். | ஏசா 11:11 ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 54:7 சங் 106:47 சங் 107:2 சங் 107:3 சங் 147:2 எரே 30:17 எரே 31:10 ஓசி 1:11 மீகா 4:6 செப் 3:18-20 சகரி 10:8-10 |
| 9 | வயல்வெளி விலங்குகளே, காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம் இரை விழுங்க வாருங்கள். | உபா 28:26 எரே 12:9 எசே 29:5 எசே 39:17 வெளிப் 19:17 வெளிப் 19:18 |
| 10 | அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்: அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்: படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்: தூங்குவதையே விரும்புகின்றவர்கள். | ஏசா 52:8 எசே 3:17 |
| 11 | தீராப் பசிகொண்ட நாய்கள்: நிறைவு என்பதையே அறியாதவர்: பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்: அவர்கள் அனைவரும் அவரவர் தம் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்: ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர். | 1சாமு 2:12-17 1சாமு 2:29-17 எசே 13:19 எசே 34:2 எசே 34:3 மீகா 3:5 மீகா 3:11 மல்கி 1:10 அப் 20:29 அப் 20:33 பிலிப் 3:2 பிலிப் 3:19 1தீமோ 3:3 1தீமோ 3:8 தீத் 1:7 தீத் 1:11 1பேது 5:2 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15 யூதா 1:11 யூதா 1:16 வெளிப் 22:15 |
| 12 | ஒவ்வொருவரும், “வாருங்கள்: நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்: போதையேற நாம் மது அருந்துவோம்: நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்” என்கின்றனர். | ஏசா 5:22 ஏசா 28:7 ஏசா 28:8 நீதி 31:4 நீதி 31:5 ஓசி 4:11 ஆமோ 6:3-6 மத் 24:49-51 லூக் 12:45 லூக் 12:46 லூக் 21:34 தீத் 1:7 |