சங்கீதம் 119:1-5 - WCV
1
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
2
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்: முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
3
அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.
4
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்: அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5
உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!