8
சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
9
மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10
நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.