செப்பனியா 3:18-20 - WCV
18
அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்: ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19
இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்: கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்: ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்: அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்.
20
அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்: ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்” என்கிறார் ஆண்டவர்.