| 1 | எகிப்தைக் குறித்த திருவாக்கு: விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்: எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்: எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும். | எரே 25:19 எரே 43:8-13 எரே 44:29 எரே 44:30 எரே 46:1-28 எசே 29:1-32 யோவே 3:19 சகரி 10:11 சகரி 14:18 |
| 2 | எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர். | ஏசா 19:13 ஏசா 19:14 ஏசா 9:21 நியா 7:22 நியா 9:23 1சாமு 14:16 1சாமு 14:20 2நாளா 20:22 2நாளா 20:23 எசே 38:21 மத் 12:25 வெளிப் 17:12-17 |
| 3 | ஆதலால், எகிப்தியர்கள் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்: அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்: அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள். | ஏசா 19:1 ஏசா 19:11-13 ஏசா 57:16 1சாமு 25:37 சங் 76:12 எரே 46:15 எசே 21:7 எசே 22:14 |
| 4 | கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர். | 1சாமு 23:7 சங் 31:8 |
| 5 | கடல் நீர் வற்றிப்போகும்: பேராறு காய்ந்து வறண்டு போகும்: | எரே 51:36 எசே 30:12 சகரி 10:11 சகரி 14:18 |
| 6 | அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்: எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்: கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும். | ஏசா 37:25 2இரா 19:24 |
| 7 | ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்: நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும். | ஏசா 32:20 எரே 14:4 எசே 19:13 யோவே 1:17 யோவே 1:18 |
| 8 | மீனவர்கள் புலம்புவர்: பேராற்றில் தூண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்: நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர். | யாத் 7:21 எண் 11:5 எசே 47:10 ஆபகூ 1:15 |
| 9 | மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர். | 1இரா 10:28 நீதி 7:16 எசே 27:7 |
| 10 | நாட்டின் தூண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்: வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர். | யாத் 7:19 யாத் 8:5 உபா 11:10 |
| 11 | சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்: “நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்? | ஏசா 19:3 ஏசா 19:13 ஏசா 29:14 ஏசா 44:25 யோபு 5:12 யோபு 5:13 யோபு 12:17 சங் 33:10 எரே 49:7 எசே 7:26 1கொரி 1:19 1கொரி 1:20 |
| 12 | அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும். | ஏசா 5:21 ஏசா 47:10-13 நியா 9:38 எரே 2:28 1கொரி 1:20 |
| 13 | சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்: நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்: எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள். | ஏசா 19:11 ரோம 1:22 |
| 14 | ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்: போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள். | ஏசா 19:2 ஏசா 29:10 ஏசா 29:14 ஏசா 47:10 ஏசா 47:11 1இரா 22:20-23 யோபு 12:16 எசே 14:7-9 2தெச 2:11 |
| 15 | எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ, நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது. | ஏசா 9:14 ஏசா 9:15 சங் 128:2 நீதி 14:23 ஆபகூ 3:17 ஆகா 1:11 1தெச 4:11 1தெச 4:12 |
| 16 | அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள். | ஏசா 30:17 சங் 48:6 எரே 30:5-7 எரே 50:37 எரே 51:30 நாகூ 3:13 |
| 17 | யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர். | ஏசா 36:1 எரே 25:19 எரே 25:27-31 எரே 43:8-13 எரே 44:28-30 எசே 29:6 எசே 29:7 |
| 18 | அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்: அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று “கதிரவன் நகரம்” என்று அழைக்கப்படும். | ஏசா 19:19 ஏசா 19:21 ஏசா 2:11 சகரி 2:11 |
| 19 | அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்: அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒன்று எழுப்பப்படும். | ஏசா 66:23 ஆதி 12:7 ஆதி 28:18 யாத் 24:4 யோசு 22:10 யோசு 22:26 சகரி 6:15 எபிரெ 13:10 |
| 20 | எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார். | ஏசா 55:13 யோசு 4:20 யோசு 4:21 யோசு 22:27 யோசு 22:28 யோசு 22:34 யோசு 24:26 யோசு 24:27 |
| 21 | அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்: எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்: பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்: ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள். | ஏசா 11:9 ஏசா 37:20 ஏசா 55:5 1சாமு 17:46 1இரா 8:43 சங் 67:2 சங் 98:2 சங் 98:3 ஆபகூ 2:14 யோவா 17:3 கலா 4:8 கலா 4:9 |
| 22 | ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்: வதைத்துக் குணமாக்குவார்: அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்: அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார். | ஏசா 19:1-15 உபா 32:39 யோபு 5:18 ஓசி 5:15 ஓசி 6:2 எபிரெ 12:11 |
| 23 | அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்: எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள். | ஏசா 11:16 ஏசா 35:8-10 ஏசா 40:3-5 எபே 2:18-22 எபே 3:6-8 |
| 24 | அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும். | ஏசா 6:13 ஏசா 49:6 ஏசா 49:22 ஏசா 65:8 ஏசா 65:22 ஏசா 66:12 ஏசா 66:19-21 உபா 32:43 சங் 117:1 சங் 117:2 சகரி 2:10 சகரி 2:11 சகரி 8:20-23 லூக் 2:32 ரோம 10:11-13 ரோம 15:9-12 ரோம 15:27-12 |
| 25 | படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: “என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!” | ஏசா 61:9 ஏசா 65:23 எண் 6:24 எண் 6:27 எண் 24:1 சங் 67:6 சங் 67:7 சங் 115:15 எபே 1:3 |