| 1 | அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில், | 2இரா 18:17 |
| 2 | அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது: “நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு: உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு.” அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்டிருந்தார். | எரே 13:1-11 எரே 19:1-15 எசே 4:5 மத் 16:24 |
| 3 | ஆண்டவர் கூறினார்: என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும். | எண் 14:34 எசே 4:5 எசே 4:6 வெளிப் 11:2 வெளிப் 11:3 |
| 4 | அசீரிய மன்னன் எகிப்தியரைச் சிறைப்பிடித்து, எத்தியோப்பியரை நாடு கடத்துவான். அவன் எகிப்தியருக்கு மானக்கேடு உண்டாகும்படி இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங் காலோடும் இருப்பிடம் மூடப்படாமலும் இழுத்து வருவான். | ஏசா 19:4 எரே 46:26 எசே 30:18 |
| 5 | அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர். | ஏசா 30:3 ஏசா 30:5 ஏசா 30:7 ஏசா 36:6 2இரா 18:21 எசே 29:6 எசே 29:7 |
| 6 | அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், “இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டியாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?” என்பார்கள். | யோபு 22:30 எரே 47:4 |