இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 21

                   
புத்தகங்களைக் காட்டு
1கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு: தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது.ஏசா 13:1 ஏசா 17:1
2கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்: நாசக்காரன் நாசம் செய்கின்றான். “ஏலாம் நாடே! கிளர்ந்தெழு: மேதியாவே! முற்றுகையிடு” அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன்.சங் 60:3 நீதி 13:15
3ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக் கொண்டன: கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்: திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.ஏசா 15:5 ஏசா 16:9 ஏசா 16:11 ஆபகூ 3:16
4என் மனம் பேதலிக்கிறது: திகில் என்னை ஆட்கொண்டது: நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது.ஏசா 5:11-14 1சாமு 25:36-38 2சாமு 13:28 2சாமு 13:29 எஸ்தர் 5:12 எஸ்தர் 7:6-10 யோபு 21:11-13 எரே 51:39 எரே 51:57 தானி 5:1 தானி 5:5 தானி 5:30 நாகூ 1:10 லூக் 21:34-36
5பந்தி தயார் செய்கிறார்கள்: கம்பளத்தை விரிக்கிறார்கள்: உண்கிறார்கள், குடிக்கிறார்கள்: தலைவர்களே, எழுங்கள்: கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.ஏசா 22:13 ஏசா 22:14 தானி 5:1-5 1கொரி 15:32
6ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: “நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை: தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.ஏசா 62:6 2இரா 9:17-20 எரே 51:12 எரே 51:13 எசே 3:17 எசே 33:2-7 ஆபகூ 2:1 ஆபகூ 2:2
7இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”ஏசா 21:9 ஏசா 37:24
8அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: “என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்: இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன்.ஏசா 5:29 எரே 4:7 எரே 25:38 எரே 49:19 எரே 50:44 1பேது 5:8
9இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, 'பாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது: அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று' என்று கூறுகிறார்.”எரே 50:3 எரே 50:9 எரே 50:29 எரே 50:42 எரே 51:27
10போராடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.ஏசா 41:15 ஏசா 41:16 2இரா 13:7 எரே 51:33 மீகா 4:13 ஆபகூ 3:12 மத் 3:12
11தூமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?” என்று ஒருவர் கேட்க,ஆதி 25:14 1நாளா 1:30
1212”காலை வருகிறது, அவ்வாறே இரவும்: கேட்பதென்றால், கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று சாமக்காவலன் கூறினான்.ஏசா 17:14 எரே 50:27 எசே 7:5-7 எசே 7:10-7 எசே 7:12-7
13அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்:1இரா 10:15 எரே 25:23 எரே 25:24 எரே 49:28-33 கலா 4:25
14தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்: அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள்.ஆதி 25:15 1நாளா 1:30 யோபு 6:19
15ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்: உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள்.யோபு 6:19 யோபு 6:20
16என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.ஏசா 16:14 யோபு 7:1
17கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.ஏசா 10:18 ஏசா 10:19 ஏசா 17:4 ஏசா 17:5 சங் 107:39
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.