17
இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, “படையொன்றைக் காண்கிறேன்” என்றான். அதற்கு யோராம், “ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. 'அமைதிக்காவா?' என்று அவன் கேட்கட்டும்” என்றான்.
18
அவ்வாறு குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, “'அமைதிக்காகவா?' என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான். அப்பொழுது காவலன்?, “தூதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால் இன்னும் திரும்பி வரவில்லை” என்று அறிவித்தான்.
19
அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, “'அமைதிக்காகவா?' என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான்.
20
காவலன் மீண்டும் “அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால் அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்!” என்றான்.