ஏசாயா 5:11-14 - WCV
11
விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவுவரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஐயோ, கேடு!
12
அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு: ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை: அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.
13
ஆதலால் அறியாமையால் என் மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்: அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்: பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்:
14
ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது: தன் பசியைப் பெருக்கியிருக்கிறது. எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார், அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.