அப்சலோம் தம் பணியாளரிடம்,”அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்: அம்னோனைத் தாக்குங்கள்” என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்” என்று கூறினான்.