எரேமியா 25:27-31 - WCV
27
இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதவே: “குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்: கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்: எழவே மாட்டீர்கள்” என்று நீ அவர்களிடம் கூறு.
28
உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால், “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்று அவர்களிடம் கூறு.
29
இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
30
ஆகவே அவர்களுக்கு எதிராக இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை: “ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்: தமது தூய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்: தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்: திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்.
31
அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்: ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்: அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்: தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.”