ஏசாயா 47:10-13 - WCV
10
உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்: “என்னைக் காண்பார் யாருமில்லை” என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன: “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.
11
தீமை உன்மேல் திண்ணமாய் வரும்: அது தோன்றும் திக்கை நீ அறியாய்: அழிவு உன்மேல் விழும்: அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது: நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.
12
இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்: ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்: ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.
13
திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்: வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.