எரேமியா 30:5-7 - WCV
5
ஆண்டவர் கூறுகின்றார்: திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்: அது அச்சத்தின் ஒலி: சமாதானத்தின் ஒலி அன்று.
6
'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்? எல்லா முகங்களும் மாறிவிட்டன: அவை வெளிறிப்போய்விட்டன!
7
அந்தோ! அந்த நாள் பெரிய நாள்: மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்: ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.