| 1 | அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். | எசே 3:10 எசே 2:8 எசே 2:9 1தீமோ 4:15 வெளிப் 10:9 வெளிப் 10:10 |
| 2 | நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார். | எரே 25:17 அப் 26:19 |
| 3 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது. | எசே 2:10 யோபு 32:18 யோபு 32:19 எரே 6:11 எரே 20:9 யோவா 7:38 கொலோ 3:16 |
| 4 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. | எசே 3:11 எசே 2:3 எசே 2:7 மத் 10:5 மத் 10:6 மத் 15:24 அப் 1:8 |
| 5 | ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய். | யோனா 1:2 யோனா 3:2-4 அப் 26:17 அப் 26:18 |
| 6 | புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள். | யோனா 3:5-10 மத் 11:20-24 மத் 12:41 மத் 12:42 லூக் 11:30-32 அப் 27:28 ரோம 9:30-33 |
| 7 | ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள். | 1சாமு 8:7 எரே 25:3 எரே 25:4 எரே 44:4 எரே 44:5 எரே 44:16 லூக் 10:16 லூக் 13:34 லூக் 19:14 யோவா 5:40-47 யோவா 15:20-24 |
| 8 | எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன். | யாத் 4:15 யாத் 4:16 யாத் 11:4-8 1இரா 21:20 ஏசா 50:7 எரே 1:18 எரே 15:20 மீகா 3:8 அப் 7:51-56 எபிரெ 11:27 எபிரெ 11:32-37 |
| 9 | உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்” என்றார். | சகரி 7:12 |
| 10 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள். | எசே 3:1-3 எசே 2:8 யோபு 22:22 சங் 119:11 நீதி 8:10 நீதி 19:20 லூக் 8:15 1தெச 2:13 1தெச 4:1 |
| 11 | நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ: அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று அவர்களுக்குச் சொல்” என்றார். | எசே 3:15 எசே 11:24 எசே 11:25 தானி 6:13 |
| 12 | அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன். | எசே 3:14 எசே 2:2 எசே 8:3 எசே 11:1 எசே 11:24 எசே 40:1 எசே 40:2 1இரா 18:12 2இரா 2:16 அப் 8:39 |
| 13 | உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியும் ஓசைபோல் ஒலித்தது. | எசே 1:24 எசே 10:5 2சாமு 5:24 |
| 14 | அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது. | எசே 3:12 எசே 8:3 எசே 37:1 |
| 15 | பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன். | எசே 3:23 எசே 1:1 எசே 10:15 எசே 43:3 |
| 16 | ஏழு நாள்களுக்குப்பின் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. |
| 17 | மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய். | எசே 33:2-9 1கொரி 12:28 |
| 18 | தீயோரிடம் “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். | எசே 18:4 எசே 18:13 எசே 18:20 எசே 33:6 எசே 33:8 ஆதி 2:17 ஆதி 3:3 ஆதி 3:4 எண் 26:65 2இரா 1:4 ஏசா 3:11 லூக் 13:3 லூக் 13:5 எபே 5:5 எபே 5:6 |
| 19 | மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய். | 2இரா 17:13-23 2நாளா 36:15 2நாளா 36:16 நீதி 29:1 எரே 42:19-22 எரே 44:4 எரே 44:5 லூக் 10:10 லூக் 10:11 அப் 18:5 அப் 18:6 1தெச 4:6 எபிரெ 2:1-3 எபிரெ 12:25 |
| 20 | நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்: அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். | எசே 18:24 எசே 18:26 எசே 33:12 எசே 33:13 2நாளா 24:2 2நாளா 24:17-22 சங் 36:3 சங் 125:5 செப் 1:6 மத் 13:20 மத் 13:21 எபிரெ 10:38 2பேது 2:18-22 1யோவா 2:19 |
| 21 | மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய். | மத் 24:24 மத் 24:25 அப் 20:31 1கொரி 4:14 1கொரி 10:12 கலா 1:6-10 கலா 5:2-7 எபே 4:17-21 எபே 5:5 எபே 5:6 கொலோ 1:28 கொலோ 3:5-8 1தெச 4:6-8 1தெச 5:14 தீத் 2:15 1யோவா 3:6-9 வெளிப் 3:19 |
| 22 | அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, “எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார். | எசே 3:14 எசே 1:3 எசே 37:1 |
| 23 | நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன். | எசே 1:4 எசே 1:28 எசே 9:3 எசே 10:18 எண் 16:19 எண் 16:42 அப் 7:55 |
| 24 | பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது: “நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்! | எசே 2:2 எசே 37:10 தானி 10:8-10 தானி 10:19-10 |
| 25 | மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள். | எசே 4:8 மாற் 3:21 யோவா 21:18 அப் 9:16 அப் 20:23 அப் 21:11-13 |
| 26 | நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள். | எசே 24:27 சங் 51:15 சங் 137:6 எரே 1:17 லூக் 1:20-22 |
| 27 | ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்: மறுப்பவன் மறுக்கட்டும்: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள். | எசே 11:25 எசே 24:27 எசே 29:21 எசே 33:32 யாத் 4:11 யாத் 4:12 லூக் 21:15 எபே 6:19 |