| 1 | மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன் முன்னே வைத்து அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு. | எசே 5:1-17 எசே 12:3-16 1சாமு 15:27 1சாமு 15:28 1இரா 11:30 1இரா 11:31 ஏசா 20:2-4 எரே 13:1-14 எரே 18:2-12 எரே 19:1-15 எரே 25:15-38 எரே 27:2-22 ஓசி 1:2-9 ஓசி 3:1-5 ஓசி 12:10 |
| 2 | அதைச் சுற்றி முற்றுகைமயிட்டாற்போல் அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி, மணல்மேடு ஒன்றையும் எழுப்பு. அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து, சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை. | எரே 39:1 எரே 39:2 எரே 52:4 லூக் 19:42-44 |
| 3 | மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே: இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம். | லேவி 2:5 |
| 4 | நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள். நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய். | எசே 4:5 எசே 4:8 |
| 5 | எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும். | ஏசா 53:6 |
| 6 | இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன். | எண் 14:34 தானி 9:24-26 தானி 12:11 தானி 12:12 வெளிப் 9:15 வெளிப் 11:2 வெளிப் 11:3 வெளிப் 12:14 வெளிப் 13:5 |
| 7 | மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, திறந்த புயத்தோடு, அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும். | எசே 4:3 எசே 6:2 |
| 8 | மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது. | எசே 3:25 |
| 9 | நீயோ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்துக்கொள். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத் தொண்ணூறு நாள்கள்வரை அவற்றால் அப்பம் சுட்டுச் சாப்பிடு. | எசே 4:13 எசே 4:16 |
| 10 | நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு. அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும். | எசே 4:16 எசே 14:13 லேவி 26:26 உபா 28:51-68 ஏசா 3:1 |
| 11 | தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும். ஒரு கலயம் அளவையில்”ஆறிலொரு பங்கைக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி. | எசே 4:16 ஏசா 5:13 யோவா 3:34 |
| 12 | உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு. மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும். | ஆதி 18:6 |
| 13 | ஆண்டவர் உரைத்தது: “இவ்வாறே இஸ்ரயேல் மக்களும் நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள் தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள்.” | தானி 1:8 ஓசி 9:3 ஓசி 9:4 |
| 14 | அப்போது நான், “தலைவராகிய ஆண்டவரே! நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதில்லை. என் இளமை முதல் இப்போதுவரை தானாய்ச் செத்ததையோ, மற்ற விலங்குகளால் கிழிக்கப்பட்டதையோ நான் உண்டதில்லை. தீட்டான இறைச்சி கூட என் வாயில் நுழைந்ததே இல்லை” என்றேன். | எசே 9:8 எசே 20:49 எரே 1:6 |
| 15 | அப்போது அவர் என்னிடம், “சரி, மனித மலத்துக்குப் பதிலாக உனக்கு மாட்டுச் சாணத்தை அனுமதிக்கிறேன். அதைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடு” என்றார். |
| 16 | மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! இதோ நான் எருசலேமில் உணவின் தரவைக் குறையச் செய்வேன். அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர். தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர். | எசே 5:16 எசே 14:13 லேவி 26:26 சங் 105:16 ஏசா 3:1 |
| 17 | இதனால் அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக, ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத் தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர். | எசே 24:23 லேவி 26:39 |