20
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!
21
என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
22
“நான் வந்து அவர்களிடம் பேசியிராவிட்டால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் பாவத்துக்குச் சாக்குப் போக்குச் சொல்ல வழியில்லை.
23
என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.
24
வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால் இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள்.