தானியேல் 10:8-10 - WCV
8
தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்: என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
9
அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.
10
அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது: கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.