நான் உம்மைவிட்டு அகன்றவுடன், ஆண்டவரின் ஆவி உம்மை எனக்குத் தெரியாமல்தூக்கிக் கொண்டு போய்விடலாம். ஆகாபிடம் சென்று நான் தெரிவிக்கையில், உம்மை அவன் காணவில்லையெனில், என்னைக் கொன்று விடுவான். உம் அடியானாகிய நான் இளமை முதல் ஆண்டவருக்கு அஞ்சி நடந்திருக்கின்றேன்.