| 1 | பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. | யோபு 6:29 மல்கி 3:18 |
| 2 | ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன். | பிரச 2:17 பிரச 9:4-6 யோபு 3:17-21 |
| 3 | இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை. | பிரச 6:3-5 யோபு 3:10-16 யோபு 10:18 யோபு 10:19 எரே 20:17 எரே 20:18 மத் 24:19 லூக் 23:29 |
| 4 | மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். | ஆதி 4:4-8 ஆதி 37:2-11 1சாமு 18:8 1சாமு 18:9 1சாமு 18:14-16 1சாமு 18:29-16 1சாமு 18:30-16 நீதி 27:4 மத் 27:18 அப் 7:9 யாக் 4:5 1யோவா 3:12 |
| 5 | தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது. | நீதி 6:10 நீதி 6:11 நீதி 12:27 நீதி 13:4 நீதி 20:4 நீதி 24:33 நீதி 24:34 |
| 6 | காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல். | சங் 37:16 நீதி 15:16 நீதி 15:17 நீதி 16:8 நீதி 17:1 |
| 7 | உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன். | பிரச 4:1 சங் 78:33 சகரி 1:6 |
| 8 | ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை: என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை: தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ? | பிரச 4:9-12 ஆதி 2:18 ஏசா 56:3-5 |
| 9 | தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். | ஆதி 2:18 யாத் 4:14-16 எண் 11:14 நீதி 27:17 ஆகா 1:14 மாற் 6:7 அப் 13:2 அப் 15:39 அப் 15:40 1கொரி 12:18-21 |
| 10 | ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்: ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை. | யாத் 32:2-4 யாத் 32:21-4 உபா 9:19 உபா 9:20 1சாமு 23:16 2சாமு 11:27 2சாமு 12:7-14 யோபு 4:3 யோபு 4:4 ஏசா 35:3 ஏசா 35:4 லூக் 22:31 லூக் 22:32 கலா 2:11-14 கலா 6:1 1தெச 4:18 1தெச 5:11 |
| 11 | குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்: தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்? | 1இரா 1:1 1இரா 1:2 |
| 12 | தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம். | 2சாமு 23:9 2சாமு 23:16 2சாமு 23:18 2சாமு 23:19 2சாமு 23:23 தானி 3:16 தானி 3:17 எபே 4:3 |
| 13 | வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன். | பிரச 9:15 பிரச 9:16 ஆதி 37:2 நீதி 19:1 நீதி 28:6 நீதி 28:15 நீதி 28:16 |
| 14 | சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு: அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு. | ஆதி 41:14 ஆதி 41:33-44 யோபு 5:11 சங் 113:7 சங் 113:8 |
| 15 | ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன். | 2சாமு 15:6 |
| 16 | அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். | 2சாமு 15:12 2சாமு 15:13 1இரா 1:5-7 1இரா 1:40-7 1இரா 12:10-16 |