| 1 | ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. | பிரச 3:17 பிரச 7:14 பிரச 8:5 பிரச 8:6 2இரா 5:26 2நாளா 33:12 நீதி 15:23 மத் 16:3 |
| 2 | பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்: | ஆதி 17:21 ஆதி 21:1 ஆதி 21:2 1சாமு 2:5 1இரா 13:2 2இரா 4:16 சங் 113:9 ஏசா 54:1 லூக் 1:13 லூக் 1:20 லூக் 1:36 யோவா 16:21 அப் 7:17 அப் 7:20 கலா 4:4 |
| 3 | கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்: | உபா 32:39 1சாமு 2:6 1சாமு 2:25 ஓசி 6:1 ஓசி 6:2 |
| 4 | இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்: | நெகே 8:9-12 நெகே 9:1-38 சங் 30:5 சங் 126:1 சங் 126:2 சங் 126:5 சங் 126:6 ஏசா 22:12 ஏசா 22:13 மத் 9:15 மத் 11:17 யோவா 16:20-22 ரோம 12:15 2கொரி 7:10 யாக் 4:9 |
| 5 | கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்: | யோசு 4:3-9 யோசு 10:27 2சாமு 18:17 2சாமு 18:18 2இரா 3:25 |
| 6 | தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்: | ஆதி 30:30-43 ஆதி 31:18 யாத் 12:35 யாத் 12:36 உபா 8:17 உபா 8:18 2இரா 5:26 2இரா 8:9 |
| 7 | கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்: | ஆதி 37:29 ஆதி 37:34 2சாமு 1:11 2சாமு 3:31 1இரா 21:27 2இரா 5:7 2இரா 6:30 எரே 36:24 யோவே 2:13 அப் 9:39 |
| 8 | அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். | எசே 16:8 சங் 139:21 எபே 3:19 எபே 5:25 எபே 5:28 எபே 5:29 தீத் 2:4 |
| 9 | வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? | பிரச 1:3 பிரச 2:11 பிரச 2:22 பிரச 2:23 பிரச 5:16 நீதி 14:23 மத் 16:26 |
| 10 | மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். | பிரச 1:13 பிரச 1:14 பிரச 2:26 ஆதி 3:19 1தெச 2:9 2தெச 3:8 |
| 11 | கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்தியிருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது. | பிரச 7:29 ஆதி 1:31 உபா 32:4 மாற் 7:37 |
| 12 | எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன். | பிரச 3:22 பிரச 9:7-9 உபா 28:63 சங் 37:3 ஏசா 64:5 லூக் 11:41 அப் 20:35 பிலிப் 4:4-9 1தெச 5:15 1தெச 5:16 1தீமோ 6:18 |
| 13 | உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை. | பிரச 2:24 பிரச 5:18-20 பிரச 6:2 பிரச 9:7 உபா 28:30 உபா 28:31 உபா 28:47 உபா 28:48 நியா 6:3-6 சங் 128:2 ஏசா 65:21-23 |
| 14 | கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார். | சங் 33:11 சங் 119:90 சங் 119:91 ஏசா 46:10 தானி 4:34 தானி 4:35 அப் 2:23 அப் 4:28 ரோம 11:36 எபே 3:11 தீத் 1:2 யாக் 1:17 |
| 15 | இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார். | பிரச 1:9 பிரச 1:10 |
| 16 | வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது. | பிரச 4:1 பிரச 5:8 1இரா 21:9-21 சங் 58:1 சங் 58:2 சங் 82:2-5 சங் 94:21 சங் 94:22 ஏசா 59:14 மீகா 2:2 மீகா 7:3 செப் 3:3 மத் 26:59 அப் 23:3 யாக் 2:6 |
| 17 | “கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். | பிரச 1:16 பிரச 2:1 |
| 18 | “மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். | ஆதி 3:17-19 யோபு 14:1-4 யோபு 15:16 சங் 49:14 சங் 49:19 சங் 49:20 சங் 73:18 சங் 73:19 சங் 90:5-12 எபிரெ 9:27 1பேது 1:24 |
| 19 | மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது: மனிதரும் மடிகிறார்: விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை: எல்லாம் வீணே. | பிரச 2:16 சங் 49:12 சங் 49:20 சங் 92:6 சங் 92:7 |
| 20 | எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும். | பிரச 3:21 பிரச 6:6 பிரச 9:10 ஆதி 25:8 ஆதி 25:17 எண் 27:13 யோபு 7:9 யோபு 17:13 யோபு 30:24 சங் 49:14 |
| 21 | மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்? | பிரச 12:7 லூக் 16:22 லூக் 16:23 யோவா 14:3 அப் 1:25 2கொரி 5:1 2கொரி 5:8 பிலிப் 1:23 |
| 22 | ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை. | பிரச 3:11 பிரச 3:12 பிரச 2:10 பிரச 2:11 பிரச 2:24 பிரச 5:18-20 பிரச 8:15 பிரச 9:7-9 பிரச 11:9 உபா 12:7 உபா 12:18 உபா 26:10 உபா 26:11 உபா 28:47 ரோம 12:11 ரோம 12:12 பிலிப் 4:4 பிலிப் 4:5 |