1இராஜாக்கள் 12:10-16 - WCV
10
அவனோடு வளர்ந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, ""உம் தந்தை எங்கள் மீதுள்ள நுகத்தைப் பளுவாக்கினார். நீர் அதன் பளுவைக் குறைத்தருளும் என்று அம்மக்கள் உம்மிடம் வேண்டினார்கள் அல்லவா? அவர்களுக்கு இந்தப் பதில் கொடும்:“என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பை விடப் பெரியது:
11
என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்: நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன் “ என்று நீர் சொல்லும்"" என்றனர்.
12
“மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள் “ என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர்.
13
அப்பொழுது அரசன், முதியோர் தனக்கு அளித்த அறிவுரையைத் தள்ளிவிட்டு, மக்களுக்கு மிகக் கடுமையான பதில் அளித்தான்.
14
இளைஞரின் அறிவுரைக்கேற்ப,“என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்: நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன் “ என்று கூறினான்.
15
இவ்வாறு அரசன் மக்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். இந்தத் திருப்பம் ஆண்டவரால் நிகழ்ந்தது. சீலோவைச் சார்ந்த அகியாவின் மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிற்குத் தாம் கூறிய வாக்கை ஆண்டவர் இவ்வாறு நிறைவேற்றினார்.
16
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு,“எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! “ என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுங்குத் திரும்பினார்.