3
ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.
4
அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது: அதன் பெயரை இருள் மூடிவிடும்.
5
அது கதிரவனைக் கண்டதுமில்லை: எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.