1இராஜாக்கள் 1:5-7 - WCV
5
அகித்து என்பவளிடம் பிறந்தவனான அதோனியா, “நானே அரசனாவேன் “ என்று செருக்குடன் சொல்லிக் கொண்டு தனக்கெனத் தேர்ப்படையையும், குதிரைப்படையையும் தன்முன் கட்டியம் கூறிச் செல்ல ஐம்பது பேரையும் பயிற்சி செய்து வைத்திருந்தான்.
6
“நீ ஏன் இப்படிச் செய்கிறாய் “ என்று அவன் தந்தை அவைன ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்: அப்சலோமுக்குப் பின் பிறந்தவன்.
7
அவன் செரூயாவின் மகனான யோவாபுடனும் குருவாகிய அபியத்தாலுடனும் கூடி ஆலோசனை செய்தான். அவர்கள் அதோனியாவுக்குத் துணை நின்றார்கள்.