1கொரிந்தியர் 12:18-21 - WCV
18
உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார்.
19
அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா?
20
எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
21
கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை “ என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை “ என்றோ சொல்ல முடியாது.