1ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்: இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.சங் 53:1 2என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!சங் 79:11 சங் 141:1 சங் 141:2 1இரா 8:31 புலம் 3:8 3ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது: என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.சங் 88:14 சங் 88:15 சங் 22:11-21 சங் 69:17-21 சங் 77:2 சங் 143:3 சங் 143:4 யோபு 6:2-4 ஏசா 53:3 ஏசா 53:10 ஏசா 53:11 புலம் 3:15-19 மத் 26:37-39 மாற் 14:33 மாற் 14:34 4படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப்படுகின்றேன்: வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.சங் 28:1 சங் 30:9 சங் 143:7 யோபு 17:1 ஏசா 38:17 ஏசா 38:18 எசே 26:20 யோனா 2:6 2கொரி 1:9 5இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்: கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்: அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை: அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.ஏசா 14:9-12 ஏசா 38:10-12 எசே 32:18-32 6ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர்.சங் 40:2 சங் 86:13 உபா 32:22 7உமது சினம் என்னை அழுத்துகின்றது: உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா)சங் 38:1 சங் 90:7 சங் 102:10 யோபு 6:4 யோபு 10:16 யோவா 3:36 ரோம 2:5-9 1பேது 2:24 வெளிப் 6:16 வெளிப் 6:17 8எனக்கு அறிமுனமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்: அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்: நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.சங் 88:18 சங் 31:11 சங் 143:4 1சாமு 23:18-20 யோபு 19:13-19 யோவா 11:57 9துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று: ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்: உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.சங் 38:10 சங் 42:3 சங் 102:9 யோபு 16:20 யோபு 17:7 புலம் 3:48 புலம் 3:49 யோவா 11:35 10இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா)சங் 6:5 சங் 30:9 சங் 115:17 சங் 118:17 ஏசா 38:18 ஏசா 38:19 மாற் 5:35 மாற் 5:36 11கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?சங் 55:23 சங் 73:18 யோபு 21:30 யோபு 26:6 நீதி 15:11 மத் 7:13 ரோம 9:22 2பேது 2:1 12இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?சங் 143:3 யோபு 10:21 யோபு 10:22 ஏசா 8:22 மத் 8:12 யூதா 1:13 யூதா 1:5 யூதா 31:12 பிரச 2:16 பிரச 8:10 பிரச 9:5 13ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.சங் 5:3 சங் 119:147 சங் 119:148 மாற் 1:35 14ஆண்டவரே! என்னை ஏன் தள்ளவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?சங் 43:2 சங் 77:7-9 மத் 27:46 15என் இளமைமுதல் நான் துன்புற்றுமடியும் நிலையில் உள்ளேன்: உம்மால் வந்த பெருந் திகிலால் தளாந்து போனேன்.சங் 73:14 யோபு 17:1 யோபு 17:11-16 ஏசா 53:3 16உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது: உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.சங் 38:1 சங் 38:2 சங் 89:46 சங் 90:7 சங் 90:11 சங் 102:10 ஏசா 53:4-6 ரோம 8:32 கலா 3:13 வெளிப் 6:17 17அவை நான்முழுவதும் வெள்ளப்பெருக்கென என்னைச் சூழ்ந்து கொண்டன: அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.சங் 22:16 சங் 42:7 சங் 69:1 சங் 69:2 சங் 116:3 யோபு 16:12 யோபு 16:13 யோபு 30:14 யோபு 30:15 புலம் 3:5-7 மத் 27:39-44 18என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்: இருளே என் நெருங்கிய நண்பன்.சங் 88:8 சங் 31:11 சங் 38:11 யோபு 19:12-15