யோபு 19:13-19 - WCV
13
என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்: எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்:
14
என் உற்றார் என்னை ஒதுக்கினர்: என் நண்பர்கள் என்னை மறந்தனர்.
15
என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்: அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.
16
என் அடிமையை அழைப்பேன்: மறுமொழி கொடான்: என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
17
என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று: என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.
18
குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்: நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.
19
என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்: என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.