1 | ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம்,“கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது. | ஆதி 3:13-15 ஏசா 27:1 மத் 10:16 2கொரி 11:3 2கொரி 11:14 வெளிப் 12:9 வெளிப் 20:2 |
2 | பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். | சங் 58:4 |
3 | ஆனால் "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது.மீறினால் நீங்கள் சாவீர்கள்” என்று கடவுள் சொன்னார்,” என்றாள். | ஆதி 2:16 ஆதி 2:17 |
4 | பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்: | யோவா 8:44 |
5 | ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்.நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது. | யாத் 20:7 1இரா 22:6 எரே 14:13 எரே 14:14 எரே 28:2 எரே 28:3 எசே 13:2-6 எசே 13:22-6 2கொரி 11:3 2கொரி 11:13-15 |
6 | அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்.அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.அவனும் உண்டான். | யோசு 7:21 நியா 16:1 நியா 16:2 |
7 | அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர். | ஆதி 3:5 உபா 28:34 2இரா 6:20 லூக் 16:23 |
8 | மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். | ஆதி 3:10 உபா 4:33 உபா 5:25 |
9 | ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். | ஆதி 4:9 ஆதி 11:5 ஆதி 16:8 ஆதி 18:20 ஆதி 18:21 யோசு 7:17-19 வெளிப் 20:12 வெளிப் 20:13 |
10 | “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன்.ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது.ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்.எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். | ஆதி 2:25 யாத் 3:6 யோபு 23:15 சங் 119:120 ஏசா 33:14 ஏசா 57:11 1யோவா 3:20 |
11 | “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். | ஆதி 4:10 சங் 50:21 ரோம 3:20 |
12 | அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்”என்றான். | ஆதி 2:18 ஆதி 2:20 ஆதி 2:22 யாத் 32:21-24 1சாமு 15:20-24 யோபு 31:33 நீதி 19:3 நீதி 28:13 லூக் 10:29 ரோம 10:3 யாக் 1:13-15 |
13 | ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். | ஆதி 4:10-12 ஆதி 44:15 1சாமு 13:11 2சாமு 3:24 2சாமு 12:9-12 யோவா 18:35 |
14 | ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். | ஆதி 3:1 ஆதி 9:6 யாத் 21:28-32 லேவி 20:25 |
15 | உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். | எண் 21:6 எண் 21:7 ஆமோ 9:3 மாற் 16:18 லூக் 10:19 அப் 28:3-6 ரோம 3:13 |
16 | அவர் பெண்ணிடம் “உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்: வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய்.ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்: அவனோ உன்னை ஆள்வான்” என்றார். | ஆதி 35:16-18 1சாமு 4:19-21 சங் 48:6 ஏசா 13:8 ஏசா 21:3 ஏசா 26:17 ஏசா 26:18 ஏசா 53:11 எரே 4:31 எரே 6:24 எரே 13:21 எரே 22:23 எரே 49:24 மீகா 4:9 மீகா 4:10 யோவா 16:21 1தெச 5:3 1தீமோ 2:15 |
17 | அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். | 1சாமு 15:23 1சாமு 15:24 மத் 22:12 மத் 25:26 மத் 25:27 மத் 25:45 லூக் 19:22 ரோம 3:19 |
18 | முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்.வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். | யோசு 23:13 யோபு 5:5 யோபு 31:40 நீதி 22:5 நீதி 24:31 ஏசா 5:6 ஏசா 7:23 ஏசா 32:13 எரே 4:3 எரே 12:13 மத் 13:7 எபிரெ 6:8 |
19 | நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்”என்றார். | பிரச 1:3 பிரச 1:13 எபே 4:28 1தெச 2:9 2தெச 3:10 |
20 | மனிதன் தன் மனைவிக்கு‘ஏவாள்’ என்று பெயரிட்டாள்: ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய். | ஆதி 2:20 ஆதி 2:23 ஆதி 5:29 ஆதி 16:11 ஆதி 29:32-35 ஆதி 35:18 யாத் 2:10 1சாமு 1:20 மத் 1:21 மத் 1:23 |
21 | ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். | ஆதி 3:7 ஏசா 61:10 ரோம 3:22 2கொரி 5:2 2கொரி 5:3 2கொரி 5:21 |
22 | பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான்.இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார். | ஆதி 3:5 ஆதி 1:26 ஆதி 11:6 ஆதி 11:7 ஏசா 19:12 ஏசா 19:13 ஏசா 47:12 ஏசா 47:13 எரே 22:23 |
23 | எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். | ஆதி 3:19 ஆதி 2:5 ஆதி 4:2 ஆதி 4:12 ஆதி 9:20 பிரச 5:9 |
24 | இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார்.ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார். | ஆதி 2:8 |