இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான்.அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள்.அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.எண் 31:17
2பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள்.ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான்.காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.ஆதி 30:29-31 ஆதி 37:13 ஆதி 46:32-34 ஆதி 47:3 யாத் 3:1 சங் 78:70-72 ஆமோ 7:15
3சில நாள்கள் சென்றன.காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.1இரா 17:7 நெகே 13:6
4ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான்.ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.யாத் 13:12 எண் 18:12 எண் 18:17 நீதி 3:9 எபிரெ 9:22 1பேது 1:19 1பேது 1:20 வெளிப் 13:8
5ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை.ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.அவன் முகம் வாடியது.எண் 16:15 எபிரெ 11:4
6ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?1நாளா 13:11-13 யோபு 5:2 ஏசா 1:18 எரே 2:5 எரே 2:31 யோவா 4:1-4 யோவா 4:8-11 மீகா 6:3-5 மத் 20:15 லூக் 15:31 லூக் 15:32
7நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்.நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார்.ஆதி 19:21 2சாமு 24:23 2இரா 8:28 யோபு 42:8 நீதி 18:5 பிரச 8:12 பிரச 8:13 ஏசா 3:10 ஏசா 3:11 எரே 6:20 மல்கி 1:8 மல்கி 1:10 மல்கி 1:13 அப் 10:35 ரோம 2:7-10 ரோம 12:1 ரோம 14:18 ரோம 15:16 எபே 1:6 1தீமோ 5:4 1பேது 2:5
8காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்”என்றான்.அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.2சாமு 3:27 2சாமு 13:26-28 2சாமு 20:9 2சாமு 20:10 நெகே 6:2 சங் 36:3 சங் 55:21 நீதி 26:24-26 மீகா 7:6 லூக் 22:48
9ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?”என்று கேட்டார்.அதற்கு அவன், “எனக்குத் தெரியாது.நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.ஆதி 3:9-11 சங் 9:12
10அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.ஆதி 3:13 யோசு 7:19 சங் 50:21
11இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.ஆதி 4:14 ஆதி 3:14 உபா 27:16-26 உபா 28:15-20 உபா 29:19-21 கலா 3:10
12நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.ஆதி 3:17 ஆதி 3:18 லேவி 26:20 உபா 28:23 உபா 28:24 ரோம 8:20
13காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.யோபு 15:22 வெளிப் 16:9 வெளிப் 16:11 வெளிப் 16:21
14இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்: உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன்.மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது.என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!”என்றான்.யோபு 15:20-24 நீதி 14:32 நீதி 28:1 ஏசா 8:22 ஓசி 13:3
15ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று: காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.1இரா 16:7 சங் 59:11 ஓசி 1:4 மத் 26:52
16பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.ஆதி 4:14 ஆதி 3:8 யாத் 20:18 2இரா 13:23 2இரா 24:20 யோபு 1:12 யோபு 2:7 யோபு 20:17 சங் 5:11 சங் 68:2 எரே 23:39 எரே 52:3 யோவா 1:3 யோவா 1:10 மத் 18:20 லூக் 13:26 1தெச 1:9
17காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்.அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.ஆதி 5:18 ஆதி 5:22
18ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான்.ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான்.மெகுயாவேலுக்கு மெத்து சாவேல் பிறந்தான்.மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.ஆதி 5:21 ஆதி 36:2
19இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான்.ஒருத்தியின் பெயர் ஆதா: மற்றொருத்தியின் பெயர் சில்லா.ஆதி 2:18 ஆதி 2:24 மத் 19:4-6 மத் 19:8-6
20ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள்.இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.ஆதி 4:21 1நாளா 2:50-52 1நாளா 4:4 1நாளா 4:5 யோவா 8:44 ரோம 4:11 ரோம 4:12
21அவன் சகோதரன் பெயர் யூபால்.இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.ரோம 4:11 ரோம 4:12
22சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள்.இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான்.தூபால் காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.யாத் 25:3 எண் 31:22 உபா 8:9 உபா 33:25 2நாளா 2:7
23இலாமேக்கு தன் மனைவியரிடம், “ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள்.இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்: என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.எண் 23:18 நியா 9:7 நியா 49:6
24காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்” என்றான்.மத் 18:22
25ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள்.காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்.ஆதி 5:3 ஆதி 5:4 1நாளா 1:1 லூக் 3:38
26சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான்.அப்பொழுதே“ஆண்டவர்” என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.உபா 26:17 உபா 26:18 1இரா 18:24 சங் 116:17 ஏசா 44:5 ஏசா 48:1 ஏசா 63:19 எரே 33:16 யோவே 2:32 செப் 3:9 அப் 2:21 அப் 11:26 ரோம 10:13 1கொரி 1:2 எபே 3:14 எபே 3:15

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.