20
துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்: துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
21
திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்: நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.
22
அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்: வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.
23
எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்: இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர்.
24
இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்: போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.