“சிம்சோன் இங்கு வந்துள்ளார்” என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது.அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். “பொழுது புலரும்வரை காத்திருப்போம்: பின்னர் அவனைக்கொல்வோம்” என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.