9
பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் வார்த்தையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கினாய், அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்: அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!
10
இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.
11
இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:”உன் குடும்பத்தினின்றே நான் எனக்கு தீங்கை வர வழைப்பேன்: உன் கண்கள்காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.
12
நீ மறைவில் செய்ததை இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன் என்று கூறினார்.