16
பின்பு அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர்.எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது.அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
17
பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி,”அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!” என்றாள்.
18
அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப்”பென்-ஓனி” என்று பெயரிட்டார்.அவன் தந்தையோ அவனைப்”பென்யமின்”(12) என்று அழைத்தார்.