32
லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி” என்று கூறி, அவனுக்கு”ரூபன்”(1) என்று பெயரிட்டார்.
33
மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்” என்று சொல்லி, அவனுக்குச்”சிமியோன்” (2) என்று பெயரிட்டார்.
34
அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார்.”இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி.ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்” என்று கூறி அவனுக்கு”லேவி”(3) என்று பெயரிட்டார்.
35
அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்”, என்று சொல்லி அவனுக்கு”யூதா”(4) என்று பெயரிட்டார்.அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.