யோசுவா 7:17-19 - WCV
17
எனவே அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார்.செராகின் குடும்பம் பிடிபட்டது.ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார்.சபதி வீடு பிடிபட்டது.
18
அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார்.செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான்.அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன்.
19
யோசுவா ஆக்கானிடம்,”என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்.என்னிடமிருந்து மறைக்காதே” என்றார்.