21
பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!” என்று கேட்டார்.
22
அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம்.இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
23
அவர்கள் என்னை நோக்கி,எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும்.எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை”என்றனர்.
24
நானும் அவர்களிடம்பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்”என்றேன்.அவர்களும் என்னிடம் தந்தனர்.நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.