எசேக்கியேல் 13:2-6 - WCV
2
மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, “ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்.
3
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதிகெட்ட இறைவாக்கினருக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.
4
இஸ்ரயேலே! உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.
5
ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை: அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.
6
அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து “இது ஆண்டவரின் வாக்கு” என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.