| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு, | எரே 19:10 எரே 19:11 எரே 18:2-4 எரே 32:14 ஏசா 30:14 புலம் 4:2 2கொரி 4:7 |
| 2 | மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி. | எரே 7:31 எரே 7:32 எரே 32:35 யோசு 15:8 2இரா 23:10 2நாளா 28:3 2நாளா 33:6 |
| 3 | நீ சொல்ல வேண்டியது: “யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன். | எரே 13:18 எரே 17:20 சங் 2:10 சங் 102:15 சங் 110:5 மத் 10:18 வெளிப் 2:29 |
| 4 | அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்: இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர். | எரே 2:13 எரே 2:17 எரே 2:19 எரே 2:34 எரே 5:6 எரே 15:6 எரே 16:11 எரே 17:13 உபா 28:20 உபா 31:16-18 உபா 32:15-23 2இரா 22:16 2இரா 22:17 ஏசா 65:11 தானி 9:5-15 |
| 5 | தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை: இதுபற்றி நான் பேசவுமில்லை: இது என் எண்ணத்தில்கூட எழவில்லை. | எண் 22:41 |
| 6 | ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று பெயர் பெறும். | எரே 19:2 எரே 19:11 எரே 7:32 எரே 7:33 யோசு 15:8 ஏசா 30:33 |
| 7 | யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன். | யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 33:11 நீதி 21:30 ஏசா 8:10 ஏசா 28:17 ஏசா 28:18 ஏசா 30:1-3 புலம் 3:37 ரோம 3:31 ரோம 4:14 |
| 8 | இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும். அது ஏளனத்துக்கு உள்ளாகும். அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்: அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான். | எரே 9:9-11 எரே 18:16 எரே 25:18 எரே 49:13 எரே 50:13 லேவி 26:32 1இரா 9:8 2நாளா 7:20 2நாளா 7:21 புலம் 2:15 புலம் 2:16 செப் 2:15 |
| 9 | தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள். | லேவி 26:29 உபா 28:53-57 2இரா 6:26-29 ஏசா 9:20 புலம் 2:20 புலம் 4:10 எசே 5:10 |
| 10 | அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு, | எரே 48:12 எரே 51:63 எரே 51:64 |
| 11 | நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது: அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர். | எரே 13:14 சங் 2:9 ஏசா 30:14 புலம் 4:2 வெளிப் 2:27 |
| 12 | ஆண்டவர் கூறுவது: எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும் எதிராக இவ்வாறு செய்வேன். அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன். | எரே 10:13 எரே 11:5 |
| 13 | எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் தூபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்.” | 2இரா 23:10 2இரா 23:12 2இரா 23:14 சங் 74:7 சங் 79:1 எசே 7:21 எசே 7:22 |
| 14 | இறைவாக்கு உரைக்க ஆண்டவரால் தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா அங்கிருந்து திரும்பி வந்து, திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு மக்கள் அனைவருக்கும் கூறியது: | எரே 19:2 எரே 19:3 |
| 15 | “இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும் இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன். ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள். | எரே 7:26 எரே 17:23 எரே 35:15-17 2நாளா 36:16 2நாளா 36:17 நெகே 9:17 நெகே 9:29 சகரி 7:11-14 அப் 7:51 அப் 7:52 |