1 | இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. | யோவா 4:3 யோவா 4:54 யோவா 10:39 யோவா 10:40 யோவா 11:54 லூக் 13:31-33 அப் 10:38 |
2 | யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. | யாத் 23:16 யாத் 23:17 லேவி 23:34-43 எண் 29:12-38 உபா 16:13-16 1இரா 8:2 1இரா 8:65 2நாளா 7:9 2நாளா 7:10 எஸ்றா 3:4 நெகே 8:14-18 சகரி 14:16-19 |
3 | இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும். | யோவா 7:5 மத் 12:46 மத் 12:47 மாற் 3:31 லூக் 8:19 அப் 2:14 |
4 | ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!” என்றனர். | நீதி 18:1 நீதி 18:2 மத் 6:1 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 லூக் 6:45 |
5 | ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. | யோவா 1:11-13 மீகா 7:5 மீகா 7:6 மாற் 3:21 |
6 | இயேசு அவர்களிடம், “எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை: உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான். | யோவா 7:8 யோவா 7:30 யோவா 2:4 யோவா 8:20 யோவா 13:1 யோவா 17:1 சங் 102:13 பிரச 3:1-15 அப் 1:7 |
7 | உலகு உங்களை வெறுக்க இயலாது: ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். | யோவா 15:19 லூக் 6:26 யாக் 4:4 1யோவா 4:5 |
8 | நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்: நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். | யோவா 7:6 யோவா 7:30 யோவா 8:20 யோவா 8:30 யோவா 11:6 யோவா 11:7 1கொரி 2:15 1கொரி 2:16 |
9 | அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார். |
10 | தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார். | சங் 26:8 சங் 40:8 மத் 3:15 கலா 4:4 |
11 | திருவிழாவின்போது, “அவர் எங்கே?” என்ற யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள். | யோவா 11:56 |
12 | மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக்காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், “அவர் நல்லவர்” என்றனர். வேறு சிலர், “இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்” என்றனர். | யோவா 7:32 யோவா 9:16 பிலிப் 2:14 |
13 | ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை. | யோவா 3:2 யோவா 9:22 யோவா 9:34 யோவா 12:42 யோவா 12:43 யோவா 19:38 யோவா 20:19 நீதி 29:25 கலா 2:12 கலா 2:13 2தீமோ 2:9-13 வெளிப் 2:13 |
14 | பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார். | யோவா 7:2 யோவா 7:37 எண் 29:12 எண் 29:13 எண் 29:17 எண் 29:20 எண் 29:23-40 |
15 | “படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள். | யோவா 7:46 மத் 7:28 மத் 7:29 மத் 22:22 மத் 22:33 லூக் 2:47 |
16 | இயேசு மறுமொழியாக, “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல: அது என்னை அனுப்பியவருடையது. | யோவா 3:11 யோவா 3:31 யோவா 8:28 யோவா 12:49 யோவா 12:50 யோவா 14:10 யோவா 14:24 யோவா 17:8 யோவா 17:14 வெளிப் 1:1 |
17 | அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர். | யோவா 1:46-49 யோவா 8:31 யோவா 8:32 யோவா 8:43 யோவா 8:47 சங் 25:8 சங் 25:9 சங் 25:12 சங் 119:10 சங் 119:101 சங் 119:102 ஏசா 35:8 எரே 31:33 எரே 31:34 ஓசி 6:3 மீகா 4:2 மல்கி 4:2 மத் 6:22 லூக் 8:15 அப் 10:1-6 அப் 11:13 அப் 11:14 அப் 17:11 பிலிப் 3:15 பிலிப் 3:16 |
18 | தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்: அவரிடத்தில் பொய்ம்மை இல்லை. | யோவா 5:41 யோவா 8:49 யோவா 8:50 1கொரி 10:31-33 கலா 6:12-14 பிலிப் 2:3-5 1தெச 2:6 1பேது 4:11 |
19 | “மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!” என்றார். | யோவா 1:17 யோவா 5:45 யோவா 9:28 யோவா 9:29 யாத் 24:2 யாத் 24:3 உபா 33:4 உபா 1:17 அப் 7:38 கலா 3:19 எபிரெ 3:3-5 |
20 | மக்கள் மறுமொழியாக, “யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது” என்றனர். | யோவா 8:48 யோவா 8:52 யோவா 10:20 மத் 10:25 மத் 11:18 மத் 11:19 மத் 12:24 மாற் 3:21 மாற் 3:22 மாற் 3:30 அப் 26:24 |
21 | இயேசு அவர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். | யோவா 5:9-11 |
22 | மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! - உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல: அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது - | ஆதி 17:10-14 லேவி 12:3 ரோம 4:9-11 கலா 3:17 |
23 | ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? | மத் 12:5 |
24 | வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்” என்றார். | யோவா 8:15 உபா 1:16 உபா 1:17 உபா 16:18 உபா 16:19 சங் 58:1 சங் 58:2 சங் 82:2 சங் 94:20 சங் 94:21 நீதி 17:15 நீதி 24:23 ஏசா 5:23 ஏசா 11:3 ஏசா 11:4 யாக் 2:1 யாக் 2:4 யாக் 2:9 |
25 | எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? | யோவா 7:10 யோவா 7:11 |
26 | இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ? | சங் 40:9 சங் 40:10 சங் 71:15 சங் 71:16 நீதி 28:1 ஏசா 42:4 ஏசா 50:7 ஏசா 50:8 மத் 22:16 அப் 4:13 எபே 6:19 எபே 6:20 பிலிப் 1:14 2தீமோ 1:7 2தீமோ 1:8 |
27 | ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக் கொண்டனர். | யோவா 7:15 யோவா 6:42 மத் 13:54-57 மாற் 6:3 லூக் 4:22 |
28 | ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. | யோவா 1:46 யோவா 8:14 மத் 2:23 லூக் 2:4 லூக் 2:11 லூக் 2:39 லூக் 2:51 |
29 | எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார். | யோவா 1:18 யோவா 8:55 யோவா 10:15 யோவா 17:25 யோவா 17:26 |
30 | இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. | யோவா 7:19 யோவா 7:32 யோவா 8:37 யோவா 8:59 யோவா 10:31 யோவா 10:39 யோவா 11:57 மாற் 11:18 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:19 |
31 | கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், “மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?” என்று பேசிக்கொண்டார்கள். | யோவா 2:23 யோவா 2:24 யோவா 4:39 யோவா 6:14 யோவா 6:15 யோவா 8:30-32 யோவா 12:42 மத் 12:23 லூக் 8:13 அப் 8:13 யாக் 2:26 |
32 | இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள். | யோவா 7:47-53 யோவா 11:47 யோவா 11:48 யோவா 12:19 மத் 12:23 மத் 12:24 மத் 23:13 |
33 | எனவே இயேசு, “இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்: பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன். | யோவா 12:35 யோவா 12:36 யோவா 13:1 யோவா 13:3 யோவா 13:33 யோவா 16:5 யோவா 16:16-22 யோவா 17:11 யோவா 17:13 மாற் 16:19 |
34 | நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது” என்றார். | யோவா 8:21-24 யோவா 13:33-36 யோவா 14:3 யோவா 14:6 யோவா 17:24 நீதி 1:24-31 ஓசி 5:6 மத் 23:39 லூக் 13:24 லூக் 13:25 லூக் 13:34 லூக் 13:35 லூக் 17:22 லூக் 17:23 |
35 | இதை கேட்ட யூதர்கள்,”நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ? | ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 செப் 3:10 அப் 21:21 யாக் 1:1 1பேது 1:1 |
36 | 'நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றாரே! இதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். | யோவா 3:4 யோவா 3:9 யோவா 6:41 யோவா 6:52 யோவா 6:60 யோவா 12:34 யோவா 16:17 யோவா 16:18 |
37 | திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்: என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். | லேவி 23:36 லேவி 23:39 எண் 29:35 1இரா 8:65 1இரா 8:66 |
38 | மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். | உபா 18:15 |
39 | தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை. | யோவா 14:16 யோவா 14:17 யோவா 14:26 நீதி 1:23 ஏசா 12:3 ஏசா 32:15 ஏசா 44:3 யோவே 2:28 லூக் 3:16 லூக் 24:49 அப் 1:4-8 அப் 2:4 அப் 2:17 அப் 2:38 அப் 4:31 ரோம 8:9 எபே 1:13 எபே 1:14 எபே 4:30 |
40 | கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். |
41 | வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? | யோவா 7:31 யோவா 1:41 யோவா 1:49 யோவா 4:25 யோவா 4:29 யோவா 4:42 யோவா 6:69 மத் 16:14-16 |
42 | தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். | யோவா 7:27 சங் 132:11 ஏசா 11:1 எரே 23:5 மீகா 5:2 மத் 2:5 லூக் 2:4 லூக் 2:11 |
43 | இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. | யோவா 7:12 யோவா 9:16 யோவா 10:19 மத் 10:35 லூக் 12:51 அப் 14:4 அப் 23:7-10 |
44 | சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. | யோவா 7:30 யோவா 8:20 யோவா 18:5 யோவா 18:6 அப் 18:10 அப் 23:11 அப் 27:23-25 |
45 | தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். | யோவா 7:32 அப் 5:21-27 |
46 | காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். | யோவா 7:26 மத் 7:29 லூக் 4:22 |
47 | பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? | யோவா 7:12 யோவா 9:27-34 2இரா 18:29 2இரா 18:32 2நாளா 32:15 மத் 27:63 2கொரி 6:8 |
48 | தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? | யோவா 7:26 யோவா 7:50 யோவா 12:42 எரே 5:4 எரே 5:5 மத் 11:25 அப் 6:7 1கொரி 1:20 1கொரி 1:22-28 1கொரி 2:8 |
49 | இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். | யோவா 9:34 யோவா 9:40 ஏசா 5:21 ஏசா 28:14 ஏசா 29:14-19 ஏசா 65:5 1கொரி 1:20 1கொரி 1:21 1கொரி 3:18-20 யாக் 3:13-18 |
50 | அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், | யோவா 3:1 யோவா 3:2 யோவா 19:39 |
51 | “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். | உபா 1:17 உபா 17:8-11 உபா 19:15-19 நீதி 18:13 |
52 | அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். | யோவா 9:34 ஆதி 19:9 யாத் 2:14 1இரா 22:24 நீதி 9:7 நீதி 9:8 |
53 | (அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள். | யோபு 5:12 யோபு 5:13 சங் 33:10 சங் 76:5 சங் 76:10 |