யோவான் 8:21-24 - WCV
21
இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்” என்றார்.
22
யூதர்கள், “ 'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது" என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
23
இயேசு அவர்களிடம், “நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்: நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.
24
ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். 'இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்” என்றார்.