அதற்கு அவர்களோ, “அப்பாலே போ” என்றனர்.மேலும் அவர்கள் “அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?” என்று சொல்லிக்கொண்டு, “அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்” என்றனர்.பிறகு லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.