9
உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
10
அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள்.
11
அவர் மறுமொழியாக”என்னை நலமாக்கியவரே, “உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்” என்று என்னிடம் கூறினார்” என்றார்.