1
செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
2
அவர் இறைப்பற்றுள்ளவர்: தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்: மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்: இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர்.
3
ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார். அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து “கொர்னேலியு” என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது.
4
அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, “ஆண்டவரே, என்ன?” என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், “உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன: அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்.
5
இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்.
6
தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார். அவர் வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.