1 | யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: | யாத் 6:14-16 ஆதி 29:31-35 ஆதி 30:1-21 ஆதி 35:18 ஆதி 35:23-26 ஆதி 46:8-26 ஆதி 49:3-27 1நாளா 2:1 1நாளா 2:2 1நாளா 12:23-40 1நாளா 27:16-22 வெளிப் 7:4-8 |
2 | ரூபன், சிமியோன், லேவி, யூதா: | ஆதி 35:22 |
3 | இசக்கார், செபுலோன், பென்யமின்: | ஆதி 35:23 |
4 | தாண், நப்தலி, காத்து, ஆசேர். |
5 | யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார். | ஆதி 46:26 நியா 8:30 |
6 | பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர். | ஆதி 50:24 ஆதி 50:26 அப் 7:14-16 |
7 | இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது. | யாத் 12:37 ஆதி 1:20 ஆதி 1:28 ஆதி 9:1 ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:4-6 ஆதி 17:16-6 ஆதி 22:17 ஆதி 26:4 ஆதி 28:3 ஆதி 28:4 ஆதி 28:14 ஆதி 35:11 ஆதி 46:3 ஆதி 47:27 ஆதி 48:4 ஆதி 48:16 உபா 10:22 உபா 26:5 நெகே 9:23 சங் 105:24 அப் 7:17 அப் 7:18 |
8 | இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். | பிரச 2:18 பிரச 2:19 பிரச 9:15 அப் 7:18 |
9 | அவன் தன் குடிமக்களை நோக்கி, "இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது. | எண் 22:4 எண் 22:5 யோபு 5:2 சங் 105:24 சங் 105:25 நீதி 14:28 நீதி 27:4 பிரச 4:4 தீத் 3:3 யாக் 3:14-16 யாக் 4:5 |
10 | அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள்.ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான். | சங் 10:2 சங் 83:3 சங் 83:4 நீதி 1:11 |
11 | எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும்அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்.பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர். | யாத் 3:7 யாத் 5:15 ஆதி 15:13 எண் 20:15 உபா 26:6 |
12 | ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர்.இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர். | சங் 105:24 நீதி 21:30 ரோம 8:28 எபிரெ 12:6-11 |
13 | எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்: |
14 | கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர். | யாத் 2:23 யாத் 6:9 ஆதி 15:13 எண் 20:15 உபா 4:20 உபா 26:6 ரூத் 1:20 அப் 7:19 அப் 7:34 |
15 | எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: |
16 | எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும். | யாத் 1:22 மத் 21:38 வெளிப் 12:4 |
17 | ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை.மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள். | ஆதி 20:11 ஆதி 42:18 நெகே 5:15 சங் 31:19 நீதி 8:13 நீதி 16:6 நீதி 24:11 நீதி 24:12 பிரச 8:12 பிரச 12:13 தானி 3:16-18 தானி 6:13 ஓசி 5:11 மீகா 6:16 மத் 10:28 லூக் 12:5 அப் 4:19 அப் 5:29 |
18 | எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி,ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?”என்று கேட்டான். | 2சாமு 13:28 பிரச 8:4 |
19 | அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, “எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது” என்று காரணம் கூறினர். | யோசு 2:4-24 1சாமு 21:2 2சாமு 17:19 2சாமு 17:20 |
20 | இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார்.இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார்.அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர். | சங் 41:1 சங் 41:2 சங் 61:5 சங் 85:9 சங் 103:11 சங் 111:5 சங் 145:19 நீதி 11:18 நீதி 19:17 பிரச 8:12 ஏசா 3:10 மத் 10:42 மத் 25:40 லூக் 1:50 எபிரெ 6:10 |
21 | இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார். | 1சாமு 2:35 1சாமு 25:28 2சாமு 7:11-13 2சாமு 7:27-29 1இரா 2:24 1இரா 11:38 சங் 37:3 சங் 127:1 சங் 127:3 நீதி 24:3 பிரச 8:12 எரே 35:2 |
22 | பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள்.பெண்மகவையோ வாழவிடுங்கள்” என்று அறிவித்தான். | யாத் 1:16 யாத் 7:19-21 சங் 105:25 நீதி 1:16 நீதி 4:16 நீதி 27:4 அப் 7:19 வெளிப் 16:4-6 |